ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்மர் கோயிலில் 20 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவுற்ற ரோப்காரின் வெள்ளோட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் பங்கேற்று, மலைக்கோயிலுக்கு ரோப்காரில் சென்று தரிசித்தனர்.
எஞ்சியுள்ள சிறிய பணிகள் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரோப்கார் சேவையை தொடங்கி வைப்பார் என்ற சேகர்பாபு, தமிழகத்தில் மேலும் 6 மலைக்கோயில்களில் ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாகவும் 2 இடங்களில் பணிகளை தொடங்க 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.